Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ராவை அடித்துக் கொன்றுள்ளார்கள் – தாயார் அதிர்ச்சி கருத்து!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (16:04 IST)
சின்னத்திரை நடிகை மரணம் தற்கொலைதான் என பிணக்கூறாய்வில் தெரியவந்துள்ள நிலையில் அதை சித்ராவின் தாயார் மறுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் முகத்தில் இருந்த கீரல்கள் அவரே ஏற்படுத்தி கொண்டவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை மறுக்கும் விதமாக சித்ராவின் தாயார் விஜயா ‘சித்ரா தற்கொலை செய்து கொள்ள கூடியவர் அல்ல. அவரை அடித்துக் கொலை செய்துள்ளார்கள்.’ என்று கூறியுள்ளார். இந்த கருத்து மீண்டும் சித்ரா மரணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments