Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த காதல் கணவரை முத்தமிட்டு வழியனுப்பிய மேக்னா ராஜ் - நெஞ்சை உருக்கும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (08:02 IST)
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) நேற்று முன்தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு  இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு  ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதையடுத்து நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், குஷ்பு , கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் அவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இந்நிலையில் மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டாராம். குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மனைவி மேக்னா கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments