Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டப்பிங் யூனியன் பஞ்சாயத்து என்ன ஆச்சு? டிவிட்டரில் மனம் திறந்த சின்மயி!!

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (17:59 IST)
தன்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கியது தொடர்பான வழக்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளதாக சின்மயி டிவிட்டரில் கூறியுள்ளார்.
 
வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். அதில் டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியும் ஒருவர். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார் சின்மயி. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்மயி மீது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு மீண்டும்  இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் வழக்கை நீட்டித்துள்ளது . இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் எந்த இடையூருமின்றி வேலை செய்யலாம் என கூறப்படுகிறது. இதனை சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தோஷமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்