Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்மயி கேள்விக்கு பதில் இருக்குதா பிக்பாஸ் ரசிகர்களே!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (23:35 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் அனேகமாக இருக்க முடியாது. சீரியல் பார்க்கும் பெண்கள் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.



 
 
மேலும் பிக்பாஸ் வீட்டில் தவறு செய்யும், புறம் பேசும் பங்கேற்பாளர்களை டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் விமர்சனம் செய்வது மட்டுமின்றி கடந்த ஞாயிறு அன்று காயத்ரியை நேரிலும் ஒருசிலர் கேள்விகளால் வறுத்தெடுத்துவிட்டனர்.
 
இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பிக்பாஸ் நேயர்களுக்கு ஒரு சாட்டையடி கேள்வியை கேட்டுள்ளார். பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கும் பொதுமக்கள் ஏன் அரசியல்வாதிகளை கேள்வியே கேட்பதில்லை. அப்படி கேட்டிருந்தால் இந்த நேரம் நாடு முன்னேறியிருக்குமே என்று கூறியுள்ளார்
 
சின்மயி தனது டுவிட்டரில், ' 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்க்ளை அவமானப்படுத்த நினைக்கும் நம்ம மக்கள், அதே ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருக்க வேண்டும்.  நாட்டை அழிப்பவர்களை எல்லாம் கேள்வி கேட்க முடியலையாம், ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளர்களை துரத்தி துரத்தி அவமான படுத்துவதில் என்ன லாபம்? என்று கூறியுள்ளார். இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகின்றீர்கள் பிக்பாஸ் ரசிகர்களே!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments