Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தின் காட்சிகளை இயக்கும் சிம்புதேவன்..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் இயக்கும் படத்திலும் பிஸியாக இருப்பதால் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகளை எல்லாம் தன்னுடைய முன்னாள் உதவி இயக்குனர்களான அறிவழகன், வசந்தபாலன் உள்ளிட்டவர்களை வைத்து படமாக்கி வந்தார்.

இந்நிலையில் இப்போது சமீபத்தில் சித்தார்த் மற்றும் சமுத்திரக்கனி சம்மந்தபட்ட சில காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ளாராம். இப்படி வேலைகளை பிரித்து பல இயக்குனர்களிடம் கொடுப்பதால் இந்தியன் 2 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments