முழுக்க முழுக்க கடலில் நடக்கும் யோகி பாபுவின் புதிய படம்!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (10:19 IST)
இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதமும், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவழைக்கும் விதத்திலானவை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் மீண்டும் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார் வடிவேலு. அதனால் அந்த படம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்புதேவன் தற்போது இயக்கும் படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கடலில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கு போட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments