Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

vinoth
செவ்வாய், 20 மே 2025 (13:32 IST)
இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கியது. இந்த படம் எவ்வளவு பிரபலமானது என்றால் படத்தின் ஒரு பாடலில் கோபிகா அணியும் சேலையை ஆட்டோகிராப் சேலை என்று சொல்லி தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் விற்கும் அளவுக்கு.

இந்த கதையில் நடிக்க பல ஹீரோக்களை தேடி சென்றார் சேரன். அதில் விஜய், பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரும் அடக்கம். ஆனால் அதெல்லாம் சில காரணங்களால் நடக்காமல் போக தானே இயக்கி நடித்தார். அந்த படத்தை அவரே பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு தயாரித்தார். அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாவிட்டால், இரண்டு பாகங்களாக விஜய் டிவிக்கு விற்றுவிடலாம் என்ற யோசனையில் அதை எடுத்துவந்தார். அதற்காக சில காட்சிகளை நீளமாகவும் ஷூட் பண்ணினார் என்றெல்லாம் பல முறை படக்குழுவினர் பேசியுள்ளனர். ஆனால் படம் ரிலீஸாகி மெஹா ஹிட்டானது. ஆனால் படம் உருவாகி பிளாக்பஸ்டர் ஆனது.

அதுமட்டுமில்லாமல் அதன் பிறகு அவரின் அடையாளமே இயக்குனர் சேரன் என்று இல்லாமல் நடிகர் சேரன் என்று சொல்லும் அளவுக்கு ஆனது. இப்போது இந்த படம் ரி ரிலீஸாகவுள்ள நிலையில் சேரன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் “படம் வெளியான போது 2 மணிநேரம் 50 நிமிடம் இருந்தது. ஆனால் இப்போது 20 நிமிடம் நீக்கியுள்ளோம். ஏனென்றால் எனக்கே சில காட்சிகள் கிரிஞ்ச் ஆக தெரிகின்றன. சில காட்சிகளில் அதிகமாக நடித்து விட்டோமோ என்று கூட தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

ஆட்டோகிராஃப் படத்தில் நான் ஓவர் ஆக்டிங்கோனு தோனுது – இயக்குனர் சேரன் சந்தேகம்!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கு: பிரபல நடிகர் கைது..!

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments