ஆபாசம் இல்லாத ஃபீல்குட் வெப் சீரிஸ்… சேரன் இயக்கிய ‘ஜர்னி’ ஜனவரி 12 ல் ரிலீஸ்!

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (07:47 IST)
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து அவர் இப்போது ’ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கி முடித்துள்ளார். சேரன் இயக்கும் இந்த தொடரில் ஆரி, சரத்குமார், பிரசனன, கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சோனி லிவ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த தொடர் வெப் சீரிஸ்களுக்கே உண்டான ஆபாசம் மற்றும் கெட்ட வார்த்தைகள் ஏதுமின்றி முழுக்க முழுக்க ஃபீல் குட் சீரியஸாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்