Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவன் சப்-இன்ஸ்பெக்டர் தானாம்… ஆனா, மனைவி இன்ஸ்பெக்டராம்…

கணவன் சப்-இன்ஸ்பெக்டர் தானாம்… ஆனா, மனைவி இன்ஸ்பெக்டராம்…

கணவன் சப்-இன்ஸ்பெக்டர் தானாம்… ஆனா, மனைவி இன்ஸ்பெக்டராம்…
, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (15:53 IST)
கணவன் – மனைவியான ரியாஸ் கான், உமா ரியாஸ் இருவரும், ஒரு படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


 
 
ஷெபி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சென்னை விடுதி’. ரியாஸ் கான், உமா ரியாஸ் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், அப்புக்குட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
சென்னையிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மர்மமான முறையில் கொலை ஒன்று நடக்கிறது. அந்த சர்க்கிளின் இன்ஸ்பெக்டரான உமா ரியாஸ், சப்-இன்ஸ்பெக்டரான ரியாஸ் கானுடன் சேர்ந்து கொலையாளியைக் கண்டுபிடிப்பதுதான் படம்.
 
ரீடேக் இல்லாமல், நான்கே நாட்களில் சிங்கிள் ஷாட் முறையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் செட் போட்டு முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். முதலில் உலக திரைப்பட விழாக்களில் திரையிட்டு, பிறகுதான் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்போது பிரபுதேவா வலையில் ஹன்சிகா!!