Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் - முந்திக் கொண்ட சிவ கார்த்திகேயன்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (18:25 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த அதன் நிர்வாகம் கட்டண விவரத்தை சமீபத்தில் வெளியிட்டது. ஜப்பானிலிருந்து ஒரு மெட்ரோ ரயிலை இறக்குமதி செய்யலாம் அந்த கட்டணத்திற்கு. அப்படியொரு விலைவாசி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரே மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த யோசிப்பார்.


 
 
அப்பேற்பட்ட மெட்ரோ ரயிலில் முதல் ஆட்டத்தைப் போடப் போகிறார் சிவ கார்த்திகேயன். 
 
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தைப் பற்றிதான் ஆச்சரியமாக பேசிக்கொள்கிறார்கள். பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தின் இன்ட்ரோ சாங்கை மெட்ரோ ரயிலில் படமாக்குகிறார்கள். சிவ கார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இடம்பெறும் இந்தப் பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். இந்தப் பாடலில் கிராபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.
 
கூட்டிக்கழித்தால் இந்தப் பாடலின் பட்ஜெட் மட்டும் இரண்டு கோடி வரும் என்கிறார்கள்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments