Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்ன கே டிவியா?... முழுக்க முழுக்க பழைய படங்களை ரி ரிலீஸ் செய்த பிரபல திரையரங்கம்!

vinoth
திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:53 IST)
2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இதுவரை எந்தவொரு புதுப்படமும் சூப்பர்ஹிட்டாகி வசூலைக் குவிக்கவில்லை. இதனால் பிரபல திரையரங்குகள் பழைய சூப்பர் ஹிட் படங்களை தூசுதட்டி ரி ரிலீஸ் செய்கின்றன. அப்படி வெளியான படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகின்றன.

சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன.

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கம் இந்த வாரம் திருமலை, வாலி, பில்லா, அண்ணாமலை, காதலுக்கு மரியாதை என தங்கள் திரையரங்கில் அனைத்து படங்களையும் பழைய படங்களாகவே ரி ரிலீஸ் செய்துள்ளது. இத்தனைக்கும் கடந்த வாரம் 8 புதிய படங்கள் ரிலீஸ் ஆகின. ஆனால் எந்த படமும் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் கமலா திரையரங்கில் வெளியான பழைய படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments