Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: ஜனவரி 6ல் ஆரம்பம்

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: ஜனவரி 6ல் ஆரம்பம்
, புதன், 30 டிசம்பர் 2015 (12:00 IST)
13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 57 நாடுகளிலிருந்து 184 படங்கள் திரையிடப்பட உள்ளன.


 
 
சென்னையில் நடைபெறும் 13 வது சர்வதேச திரைப்பட விழாவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 36 படங்கள், சீனா, வெனிசுலா உள்ளிட்ட 57 நாடுகளைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என மொத்தம் 184 படங்கள் திரையிடப்பட உள்ளன. முதல் திரைப்படமாக 2015 இல் பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற “விக்டோரியா” என்ற திரைப்படம் முதலில் திரையிடப்படவுள்ளது.
 
இந்த விழாவில் திரையிடப்படும் 36 வயதினிலே, தனி ஒருவன், பிசாசு, காக்கா முட்டை, விசாரணை  உள்ளிட்ட 12 தமிழ் படங்களுள் சிறந்த 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களுடைய 7 படங்கள் திரையிடப்படவுள்ளன.
 
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள அனைத்து திரைப்படங்களை பார்ப்பதற்காக ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்க உள்ளனர். இதில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் ரூ.200 கட்டணமாக வசூலிக்க உள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil