Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை கார்னாலும் வாங்குங்க.. வரியை ஒழுங்கா கட்டுங்க! – தனுஷுக்கு நீதிமன்றம் குட்டு!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (11:09 IST)
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்ட மனுவின் மீது தனுஷுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் தனுஷ் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் “ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட சரியாக வரி கட்டுகிறார்கள். 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட ஜிஎஸ்ரி வரி கட்டுகிறார், ஆனால் வரியை நீக்க சொல்லி அவர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? மக்கள் வரிப்பணத்தில் அமைந்த சாலையில் பயணிக்கிறீர்கள் எனும்போது முழு வரியையும் கட்டலாமே?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் கார் வாங்கும்போது தனது தொழில் என்னவென்று குறிப்பிடாதது குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள் ஆனால் முழுமையாக வரியை கட்டுங்கள் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே 50% வரியை கட்டி விட்டதாகவும் மீத தொகையை கட்ட தயாராக இருப்பதாகவும் தனுஷ் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments