Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மாநகர பாக்ஸ் ஆபீஸ்

சென்னை மாநகர பாக்ஸ் ஆபீஸ்
, திங்கள், 7 ஜூலை 2014 (17:32 IST)
சென்னை மாநகர பாக்ஸ் ஆபீஸில் சென்ற வார இறுதியில் (ஜுலை 4 முதல் 6 தேதிவரை) விமலின் மஞ்சப்பை 3.52 லட்சங்களை வசூல் செய்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.


 
ஐந்தாவது வார இறுதிவரை இதன் மொத்த சென்னை மாநகர வசூல் 2.55 கோடிகள்.
webdunia


 

நான்காவது இடத்தில் ஜெய்யின் வடகறி. சென்ற வார இறுதியில் இப்படம் 8.8 லட்சங்களை வசூலித்து இந்த இடத்தைப் பிடித்துள்ளது. மூன்று வாரங்கள் முடிவில் இதன் சென்னை மாநகர வசூல் 1.6 கோடி.
webdunia

 

இந்த வருடத்தின் நல்ல படங்களில் ஒன்றான முண்டாசுப்பட்டி சென்ற வார இறுதியில் 9 லட்சங்களை தனதாக்கி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. நான்கு வாரங்கள் முடிவில் இதன் வசூல் 1.6 கோடி.
webdunia

 



இயக்குனர் விஜய்யின் சைவம் சென்ற வார இறுதியில் 10 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் வசூல் 68 லட்சங்கள்.
webdunia

 

இந்த வாரம் முதலிடம் அரிமா நம்பிக்கு. விக்ரம் பிரபு நடித்திருக்கும் இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 82.4 லட்சங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil