Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - மானம் காத்த ஜாக்சன் துரை

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - மானம் காத்த ஜாக்சன் துரை

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (17:23 IST)
5. மெட்ரோ
சென்ற வார இறுதியில் இப்படம் 6.6 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது நேற்றுவரை இதன் சென்னை வசூல், 54.63 லட்சங்கள்.
 
4. ஃபைண்டிங் டோரி (ஆங்கிலம்)
இந்த அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் 7.37 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 62.20 லட்சங்கள்.
 
3. அப்பா
சமுத்திரகனி இயக்கி நடித்திருக்கும் அப்பா சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் படம் சென்னையில் 18.05 லட்சங்களை வசூலித்து 3- வது இடத்தைப் பிடித்துள்ளது. 


 
 
2. த லெஷென்ட் ஆஃப் டார்ஜான் (ஆங்கிலம்)
சென்ற வாரம் வெளியான இந்த ஆங்கிலப் படம் முதல் மூன்று தினங்களில் 66.71 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.


 
 
1. ஜாக்சன் துரை
கடந்த 3 வாரங்களாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை ஆங்கிலப் படங்களே பிடித்தன. நான்காவது வாரமும் ஆங்கிலப் படம் முதலிடத்தைப் பிடிக்காமல் ஜாக்சன் துரை தடுத்தாட்கொண்டுள்ளது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 77.34 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்: ஹீரோ அறிவிப்பு..!

என்னை ஏமாற்றியதற்கு நன்றி! மஞ்சள் வீரன் டிடிஎஃப் வெளியிட்ட ஆதங்க வீடியோ!

பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments