Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ரஜினி முருகன்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ரஜினி முருகன்
, செவ்வாய், 26 ஜனவரி 2016 (13:09 IST)
சென்னை பாக்ஸ் ஆபிஸில் சென்ற வாரம் முதலிடத்தில் இருந்த ரஜினி முருகன் இந்த வாரமும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.


 

 

5. கெத்து
 
உதயநிதியின் கெத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 16.07 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 1.03 கோடி.
 
4. கதகளி
 
நான்காவது இடத்தில் கதகளி. இந்த ஆக்ஷன் படம் சென்ற வார இறுதியில் 24.13 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 1.12 கோடி.
 
3. தாரை தப்பட்டை
 
பாலா படம் சென்ற வார இறுதியில் 24.80 லட்சங்களை வசூலித்து 3 -வது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.49 கோடி.
 
2. ஏர்லிப்ட்
 
அக்ஷய் குமார் நடித்துள்ள இந்திப் படம் ஏர்லிப்ட் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 33.42 லட்சங்களை வசூலித்துள்ளதது.
 
1. ரஜினி முருகன்
 
அதே முதலிடத்தை இந்த வாரமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 79.53 லட்சங்களை வசூலித்தது. இதுவரையான சென்னை வசூல் 2.42 கோடிகள்.

Share this Story:

Follow Webdunia tamil