Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2015 (16:11 IST)
5. பாகுபலி:

பத்து வாரங்கள் முடிந்த நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தில் பாகுபலி உள்ளது. சமீபத்தில் எந்தப் படமும் இவ்வளவு நாள்கள் பாக்ஸ் ஆபிஸில் தாக்குப் பிடித்ததில்லை.



 

சென்ற வார இறுதியில் 2.95 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 8.23 கோடிகளை தனதாக்கியுள்ளது.

4. ஸ்ட்ராபரி:


 
பா.விஜய் எழுதி இயக்கி நடித்திருக்கும் பேய் படம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 17.08 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3. பாயும் புலி:


 
சுசீந்திரனின் பாயும் புலி நல்ல ஓபனிங்கை பெற்றாலும் படம் சரியில்லாததால் படிப்படியாக வசூல் இறங்கியது. சென்ற வார இறுதியில் இப்படம் 20.80 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 1.58 கோடி.

2. யட்சன்:


 
ஆர்யா நடித்துள்ள யட்சன் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. சென்றவாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 63.83 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

1. தனி ஒருவன்:
தொடர்ந்து அதே முதலிடத்தில் தனி ஒருவன். படத்தின் ஸ்கிரிப்ட் நேர்த்தியாகவும் சுவாரஸியமாகவும் இருந்தால் பார்வையாளர்களை கவரலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது தனி ஒருவன்.


 

சென்ற வார இறுதியில் 75.74 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் மட்டும் 4.86 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் நயன்தாரா!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

Show comments