Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - 4 வது வாரத்தில் 4 வது இடத்துக்கு சென்ற கபாலி

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - 4 வது வாரத்தில் 4 வது இடத்துக்கு சென்ற கபாலி

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (10:10 IST)
கபாலி இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டு இந்திப் படங்கள் கடந்தவார இறுதியில் கபாலியைவிட அதிகம் சென்னையில் வசூலித்துள்ளன. ஒரு தமிழ்ப் படம், வாகா.


 
 
5. ஜோக்கர்
 
ராஜு முருகனின் ஜோக்கர் இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் இந்தப் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 19.60 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
4. கபாலி
 
சென்ற வார இறுதியில் கபாலி சென்னையில் 23.30 லட்சங்களை வசூலித்துள்ளது. ரஜினி படம் தவிர வேறு ஒரு படம் இப்படியொரு வசூலை நான்காவது வார இறுதியில் பெற வாய்ப்பில்லை. சென்ற ஞாயிறுவரை கபாலியின் சென்னை வசூல், 11.01 கோடிகள்.
 
3. மொகஞ்ச தாரோ (இந்தி)
 
ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 41.30 லட்சங்கள். இந்திப் படங்களின் சென்னை வசூல் மாதத்துக்கு மாதம் அதிகரித்து வருவது தமிழ் சினிமாவுக்கு கவலையளிக்கும் அம்சமாகும்.
 
2. ரஸ்டம் (இந்தி)
 
அக்ஷய் குமார் நடித்துள்ள ரஸ்டம் சென்ற வாரம் வெளியானது. அதிக எதிர்ப்பார்ப்புக்குள்ளான இந்தப் படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 43.25 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
1. வாகா
 
விக்ரம் பிரபு நடித்துள்ள வாகா கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. எல்லைப் பகுதி ராணுவத்தினரின் தியாகத்தை இன்னும் அதிகமாக படம் பேசியிருக்கலாம் என்பது பலரது அபிப்பிராயம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 66.72 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. விக்ரம் பிரபு படத்துக்கு இது நல்ல ஓபனிங். இந்த ஓபனிங்கை வார நாள்களில் படம் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதே கேள்வி.
 
சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்தி, ஆங்கிலப் படங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு முந்தைய வாரம் வெளியான தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் சென்ற வார இறுதியில் ஒரு லட்சம்கூட வசூலிக்க முடியாமல் 12 வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 95.83 லட்சங்கள்.
 
ஆங்கில பேய் படமான லைட்ஸ் அவுட் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தைவிட அதிகம் வசூலித்துள்ளது. வார இறுதியில் 9.61 லட்சங்களுடன் 9 வது இடத்தில் உள்ள இப்படம் இதுவரை சென்னையில் 83.80 லட்சங்களை தனதாக்கியுள்ளது. 
 
ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப் நடித்திருக்கும் முடிஞ்சா இவன புடி திரைப்படம் மோசமான வசூலை பெற்றுள்ளது. கடந்த வாரம் திரைக்கு வந்த இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 3.80 லட்சங்களை மட்டுமே வசூலித்து பத்தாவது இடத்தில் உள்ளது. கடைசி நேரத்தில் படம் பிரச்சனைக்குள்ளானதும், அறிவித்த பல திரையரங்குகளில் படம் வெளியாகாததும் இந்த குறைந்த வசூலுக்கு காரணம். வரும் நாள்களில் படம் பிக்கப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாக்ஸ் ஆபிஸின் முதல் பத்து இடங்களில் வாகா, கபாலி, திருநாள் (8 வது இடம்), முடிஞ்சா இவன புடி, ஜோக்கர் ஆகிய 5 தமிழ்ப் படங்களே உள்ளன. பிற ஐந்து இடங்களில் இரண்டை ஆங்கிலப் படங்களும் (சூஸையிட் ஸ்கொயட், லைட்ஸ் அவுட்) இரண்டை இந்திப் படங்களும் (ரஸ்டம், மொகஞ்ச தாரோ) ஓரிடத்தை தெலுங்குப் படமும் (பாபு பங்காரம்) பிடித்துள்ளன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவை அடுத்து வெங்கல் ராவ் சிகிச்சைக்கு உதவி செய்த தமிழ் நடிகை..!

எமி ஜாக்சன் வைத்த பேச்சிலர் பார்ட்டி.. இரண்டாம் திருமணம் எப்போது?

ரஜினியின் ‘கூலி’ படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படம்.. ‘காலா’ மாதிரியே இருக்குதே..!

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments