Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - தமிழ்ப் படங்களால் வெல்ல முடியாத பாகுபலி

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (20:39 IST)
5. பஜ்ரங்கி பைஜான்


 
சல்மான் கானின் இந்த இந்திப் படம் சென்ற வார இறுதியில் 12.70 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல் 1.17 கோடி.
 
4. ஆரஞ்சு மிட்டாய்


 
விமர்சகர்கள் பாராட்டினாலும் ஆரஞ்சு மிட்டாயின் வசூல் மிக மோசமாகவே உள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 18 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
 
3. இது என்ன மாயம்


 
விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இதன் வசூல் 22.61 லட்சங்கள் மட்டுமே.

2. சகலகலா வல்லவன்


 
ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. விமர்சனங்கள் எதிர்மறையாக இருப்பினும் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 58 லட்சங்கள்.
 
1. பாகுபலி


 
தொடர்ந்து அதே முதலிடத்தில் பாகுபலி. கடந்த வார இறுதியில் 60 லட்சங்களை வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பாகுபலியின் இதுவரையான சென்னை வசூல் 6.7 கோடிகள்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments