Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் அரண்மனை

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (13:18 IST)
5. ஆள்
 
இந்தி அமீர் படத்தின் தழுவலான ஆள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சென்ற வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 2.9 லட்சங்களை மட்டும் வசூலித்துள்ளது.
 

4. வானவராயன் வல்லவராயன்
 
ஆண்பாவம் படத்தின் பல அம்சங்களை கொண்டுள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 6.8 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை இதன் சென்னை வசூல் 61.3 லட்சங்கள்.

3. சிகரம் தொடு
 
விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு சென்ற வார இறுதியில் 16 லட்சங்களை வசூலித்து 3 - வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை இதன் சென்னை வசூல் 1.45 கோடி.
 
 

2. ஆடாம ஜெயிச்சோமடா
 
நகைச்சுவைப் படமான இது சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது.

முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 17 லட்சங்கள்.

1. அரண்மனை
 
சுந்தர். சி யின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது.


ஆவி படமான அரண்மனை சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. ஞாயிறுவரை இதன் மூன்று நாள் வசூல் 89.5 லட்சங்கள். 

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments