Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. புதிய பணியை தொடங்கிய வெங்கடேஷ் பட்..!

Mahendran
புதன், 10 ஏப்ரல் 2024 (15:40 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் தற்போது புதிய பணியை தொடங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இது குறித்த புரமோ வீடியோக்களும் வெளியாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஐந்தாவது சீசனில் இருந்து விலகிக் கொள்வதாக வெங்கடேஷ் பட் அறிவித்த நிலையில் அவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோர்களும் வெளியேறிவிட்டனர்.

இந்த நிலையில் வெங்கடேஷ் பட் வேறொரு சேனல் நடத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் நீங்க சொல்லிட்டீங்க நாங்க ஆரம்பிக்கிறோம்’ என்று பதிவு செய்து உள்ளதை அடுத்து அவர் புதிய ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகிவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இருப்பினும் என்ன ப்ராஜெக்ட்? எந்த சேனலுக்கு? என்பது குறித்த விவரங்களை அவர் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments