Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் படத்தை காப்பி அடித்து விட்டார்கள்… புகாரளித்த தாதா 87 இயக்குனர்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (11:13 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் தாதா 87 என்ற படம் சாருஹாசன் நடிப்பில் வெளியானது.

இந்த படத்தை இயக்குனர் விஜய் என்பவர் தயாரித்து இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இணையத்தில் கவனம் பெற்றது. அதற்கு முக்கியக் காரணம் சாருஹாசன் 87 வயது தாதாவாக நடித்திருந்ததுதான். இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் காப்பி அடித்து தெலுங்கு ஒன் பை டு என்ற பெயரில் எடுத்துள்ளதாக இயக்குனர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஊடக பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம்! கமலஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா 87 படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி .

தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். இன்று காலை YouTube நடிகர் சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தாதா87 படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .

ரஜினியின் காலா டீசருடன் தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள் அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள்ளார்கள்.இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்.

1/2 படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது.

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.என பெரியவர்கள் கூறுவார்கள்.

தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு நடைபெற்று வருகிறது .இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில்
அறிவிப்பேன்.
-விஜய் ஸ்ரீ ஜி
தயாரிப்பாளர்/ இயக்குனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments