Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தாண்டா''-- நடிகர் வடிவேலு வீடியோ வைரல்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (18:47 IST)
சந்திரமுகி 2 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2.  இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து  வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி இசையமைத்துள்ளார்.

இப்படம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில் ஸ்வாகதாஞ்சலி கீரவாணியின் இசையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் வடிவேலு இப்படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில்,  நடிகர் வடிவேலு, ‘’யார பார்த்துடா பீதிக்குப் பொறந்தவனேன்னு சொல்லற ….சந்திரமுகி பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 ….பத்து பாகங்கள் எடுத்தாலும் சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு  நான் தாண்டா’’ என்று பேசும்போது, எவரது என்று சந்திரமுகியில்  குரல் மிரட்டும் தொனியில் கேட்கிறது….இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments