Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

Mahendran
வியாழன், 9 ஜனவரி 2025 (14:19 IST)
அஜித் நடித்த  ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ள நிலையில் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
‘விடாமுயற்சி’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைமில் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் இடம்பெற்ற சில வார்த்தைகள் மட்டும் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரிலீஸ் செய்து குறித்து அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியீடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
  அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

பிரியங்கா காந்தியை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்துள்ளேன் – கங்கனா ரனாவத்!

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

விஷாலை இப்படிப் பார்க்க சந்தோஷமாகதான் இருக்கு… பாடகி சுசித்ரா தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments