காஜல் அகர்வால் படத்துக்கு 25 கட் – கொத்துக்கறி போட்ட சென்ஸார் !

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:21 IST)
காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் பாரிஸ் படத்துக்குத் தணிக்கைக் குழு மொத்தமாக 25 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான க்யின் படம் மிகப்பெரிய வெற்றியை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்றது. இந்த படத்தைத் தென் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் பாரீஸ் பாரீஸ் எனவும், தமன்னாவை நாயகியாகக்கொண்டு தெலுங்கில் தட் இஸ் மகாலெட்சுமி எனவும் மலையாளத்தில் மஞ்சிமா மோகனை நாயகியாகக்கொண்டு ஜம் ஜம் எனவும் நடிகை பருல் யாதவ்வை கதாநாயகியாகக்கொண்டு கன்னடத்தில் பட்டர்ஃப்ளை எனவும் உருவாகியுள்ளது. இதில் தமிழ் வெர்ஷனை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

இப்போது இந்தப் படத்தை தணிக்கைத் துறைக்கு அனுப்பியபோது ஆட்சேபிக்கத் தகுந்த சிலக் காட்சிகளுக்கு மங்கலாக்கவும், சில காட்சிகளில் ஆடியோவை ம்யூட் செய்தும், சில இடங்களில் ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்ட சொல்லியும் மொத்தமாக 25 இடங்களில் கட் சொல்லியுள்ளனர். இதனால் படத்தை மறுசீராய்வுக்கு அனுப்பும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த 1000 கோடி வசூல் தயார்!? சாமியாட்டம் போட வைத்த ரிஷப் ஷெட்டி! - காந்தாரா 2 திரைவிமர்சனம்!

புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… ப்ரோமோ வீடியோவோடு வெளியாகவுள்ள அறிவிப்பு!

நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸார் சோதனை!

’என்னால் நான்கு மணிநேரத்துக்கு மேல் தூங்க முடியாது’… அஜித் சொல்லும் காரணம்!

விக்ரம் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்..!

அடுத்த கட்டுரையில்
Show comments