Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் இப்படி யாரும் செய்யக்கூடாது! தணிக்கை அதிகாரி லீலா எச்சரிக்கை

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (13:33 IST)
ஒரு திரைப்படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்துகிறோம் என்ற பெயரில் தயாரிப்பாளர்களின் விளம்பர யுக்திக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீபகாலமாக தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்ற படம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. தணிக்கை அதிகாரிகளே பாராட்டிவிட்டால் அந்த படம் நன்றாக இருக்கும் என்ற கருத்து உருவாகும் என்பதால் இவ்விதமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இதுகுறித்து தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி அவர்கள் எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நான் மட்டுமல்ல, தணிக்கைக் குழு அதிகாரி யாரும், திரைப்படங்களை பாராட்டுவதோ அல்லது விமர்சிப்பதோ கிடையாது. அது, முறையும் அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் யாரும், 'திரைப்படம் எப்படி இருந்தது?' என்று கேட்கும்போது, சம்பிரதாயத்துக்காக மட்டுமே, 'படம் நன்றாக உள்ளது' என்று சொல்வதை, தணிக்கை அதிகாரிகள் பாராட்டியுள்ளதாக, தயாரிப்பாளர்கள் சிலர் அதை விளம்பரப்படுத்துகின்றனர். இது தவறானது. இனி, இது போல் யாரும் செய்ய வேண்டாம் என்று, தயாரிப்பாளர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments