டைட்டிலை மாற்ற சொன்ன சென்சார், மறுப்பு தெரிவித்த இயக்குனர்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (08:00 IST)
கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவான 'தேவராட்டம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் இந்த படம் ஜாதிப்பெயரில் இருப்பதால் இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று ஒருசில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்றபோது சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு இருப்பதால் டைட்டிலை மாற்றுமாறு வலியுறுத்தினர். ஆனால் இயக்குனர் 'கொம்பன்' முத்தையா படத்தின் டைட்டிலை மாற்ற மறுத்துவிட்டதோடு, இதுகுறித்து டெல்லியில் உள்ள ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளார். இதனால் இந்த படத்தின் சென்சார் பணிகள் தாமதமாகியுள்ளது

மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடப்பதாக இந்த கதை அமைந்துள்ளதாகவும், இந்த படத்தில் கெளதம் கார்த்திக் கல்லூரி மாணவராகவும், கிராமத்தின் நலனுக்காக பாடுபவராகவும் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ராஜ்கிரண், கோவை சரளா, கலையரசன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே. பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இப்படி கத்திக்கிட்டே இருந்தா.. யாரு ஷோ பாப்பாங்க? - பிக்பாஸ் வீட்டாரை கிழித்தெடுத்த விஜய் சேதுபதி!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

பிரியங்கா மோகனின் க்யூட் வைரல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments