Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாண்டிராஜ் படம் - விஷாலுடன் இணையும் கேத்ரின் தெரேசா

பாண்டிராஜ் படம் - விஷாலுடன் இணையும் கேத்ரின் தெரேசா
, வியாழன், 2 ஜூலை 2015 (13:02 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த, பாயும்புலி முடிந்துவிட்டது. அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார்.
பாண்டிராஜ் சிம்பு, நயன்தாராவை வைத்து இயக்கிய இது நம்ம ஆளு, பாடல்களின் தாமதத்தால் இன்னும் முடியாமல் உள்ளது. பாடல்களும், பணமும் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார் பாண்டிராஜ். 
 
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெணடுக்காக அவர் இயக்கிய ஹைக்கூ முடிந்துவிட்டது. அதனால் விரைவில் விஷால் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கேத்ரின் தெரேசா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil