Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்ப்படம்2 எதிராக வழக்கு - வசூலை முடக்கும்படி கோரிக்கை

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (09:44 IST)
தமிழ்ப்படம் 2 க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் சிவாவின் நடிப்பிலும், சி.எஸ்.அமுதன் இயக்கத்திலும், சசிகாந்த் தயாரிப்பிலும் உருவான தமிழ்படம் 2 அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்படம் முதல் பாகத்திலேயே ரஜினி, கமல் உள்ளிட்ட பலரையும் ஏகத்துக்கும் கிண்டலடித்திருந்தனர்.
 
இரண்டாம் பாகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நடிகர் விஜய் வரை ஒருத்தரையும் விடமால் கிண்டலடித்துள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சிவாவை ரசிகர்கள் அகில உலக சூப்பர்ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர்.   
 
6 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 10 கோடி ரூபாய்க்கு மேல் கல்லா கட்டியுள்ளது. 
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தை தயாரித்த துரைதயாநிதி, தன் அனுமதி இல்லாமல் தமிழ்படம் என்ற தலைப்பை பயன்படுத்தி படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளனர் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இப்படம் வசூலித்த மொத்த தொகையையும் முடக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments