தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (11:30 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங், தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் இருந்து செல்லும் வழியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இப்பகுதியில்,  குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அப்பகுதியில் புகை சூழ்ந்த நிலையில்,  தனுஷ் பட ஷூட்டிங்  நடைபெற்று வந்துள்ளது. ஆனால், இதற்கு முறைப்படி தனுஷ் பட குழுவினர் பெறவில்லை என்று கூறப்படுகிறது,. எனவே, தென்காசி மாவட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ''கேப்டன் மில்லர்'' பட ஷூட்டிங்கை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இப்போது முறைப்படி அனுமதி பெற்ற பின்னர் மீண்டும் ஷூட்டிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments