Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கான் படவிழாவில் பங்கேற்கும் எமி ஜாக்சன்

கான் படவிழாவில் பங்கேற்கும் எமி ஜாக்சன்

கான் படவிழாவில் பங்கேற்கும் எமி ஜாக்சன்
, புதன், 11 மே 2016 (14:47 IST)
தீவிர சினிமா ரசிகர்கள் முதலிடத்தில் வைத்து கொண்டாடும் திரைப்பட விழா, கான்.


 


கான் திரைப்பட விழாவில் கமர்ஷியல் படங்களுக்கு இடமில்லை. தீவிர சினிமாக்கள் மட்டுமே அங்கு விருதுபெறும்.
 
ஆனால், நுகர்வு கலாச்சாரமும், கார்ப்பரேட் வணிகமும் கான் திரைப்பட விழாவிலும் ஊடுருவியுள்ளது. ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத் போன்ற செலிபிரிட்டிகள்தான் ரெட்கார்ப்பெட் மரியாதையை கானில் பெறுகிறார்கள். 
 
ஐஸ்வார்யா ராய் கான் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பை பெறுவதற்கான ஆயுள்கால சந்தாவை பெற்றிருப்பார் போலுள்ளது. இந்த வருடமும் ஐஸ்வர்யா ராய் அழைக்கப்பட்டிருக்கிறார். உடன் செல்லும் இன்னொரு பாலிவுட் பிரபலம், சோனம் கபூர்.
 
இந்த வருடம் கூடுதலாக எமி ஜாக்சனும் சிவப்பு கம்பள வரவேற்பை பெறுகிறார். ஐ படத்தில் அற்புதன பிரமாதமான அட்டகாசமான நடிப்பை வழங்கியதற்காக இந்த மரியாதையாக இருக்கலாம்.
 
விக்ரம் பெண் இல்லை என்பதால் அவருக்கு எவ்வித மரியாதையும் தருவதாக உத்தேசமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலசந்தரின் கனவை படமாக்கும் சமுத்திரகனி