Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில்தான் நான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் கௌதமிதான் ஹீரோ

சினிமாவில்தான் நான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் கௌதமிதான் ஹீரோ
, திங்கள், 26 ஜனவரி 2015 (12:13 IST)
கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.


 
ஹைதராபாத்தில் நடந்த யசோதா இன்டர்நேஷனல் கேன்சர் மாநாட்டில் கௌதமியுடன் கலந்து கொண்டார். துணை முதலமைச்சர், பிரபல மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.
 
விழாவில் கமல் பேசியதாவது:-
 
"புற்று நோய் வந்தால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்து போச்சு, விரைவில் இறந்து விடுவோம் என்று பலர் நினைக்கிறார்கள். இது வெறும் பயம்தான்.
 
புற்றுநோயை உடனடியாக கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கௌதமிதான். புற்றுநோய்க்கு அவர் பணிந்து விடவில்லை. அதை எதிர்த்து தைரியமாக போராடினார். இறுதியில் அதனை விரட்டினார். 
 
சினிமாவில்தான் நான் ஹீரோ. ஆனால் நிஜவாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ. அவருக்கு முன்னால் நான் துணை நடிகர்தான். நம்பிக்கையுடன் செயல்பட்டால் புற்றுநோயை எளிதில் விரட்டி விடலாம்" என்றார்.
 
நடிகை கௌதமி பேசியதாவது:-
 
"எனக்கு கேன்சர் வந்ததை மருத்துவர்கள் யாரும் பரிசோதனை செய்ய சொல்லவில்லை. நான் படித்த அறிவினால் அதனை தெரிந்து கொண்டேன். இதற்காக சிகிச்சைக்கு சென்றேன்.
 
முதலில் ஹீமோ தெரபி செய்தேன். மறுபடியும் கேன்சர் வந்தது. மீண்டும் சிசிச்சை எடுத்தேன். எனது தைரியத்தை இழக்கவில்லை. இறுதியில் கேன்சரை விரட்டினேன்.
 
எந்த வியாதியையும் ஒருவர் நினைத்தால் அதனை விரட்டி விட முடியும். உடலில் உயிர் இருக்கும் வரை அதனை எதிர்த்து போராட வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க கூடாது" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil