Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“விக்ரம் ஹிட்டுக்குப் பிறகு எந்த படமும் பப்ளிசிட்டி தொகையைக் கூட எடுக்கவில்லை …” தயாரிப்பாளர் சி வி குமாரின் பதிவு

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (15:27 IST)
தயாரிப்பாளர் சி வி குமார் பகிர்ந்துள்ள முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

விக்ரம் ஹிட் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்போது சிறுபட்ஜெட் படங்களைத் தயாரித்து வரும் சி வி குமாரின் முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ஜூலை 1 வரை ரிலீஸான எந்த திரைப்படமும் பிரிண்ட் மற்றும் பப்ளிசிட்டிக்காக செலவிடப்பட்ட தொகையைக் கூட வசூல் செய்யவில்லை. ஓடிடி தளங்களின் வருகை தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments