Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் வெல்லப்போவது தேர்தல் ஆணையம்தான் – இயக்குனர் கிண்டல் !

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (13:10 IST)
தமிழ்ப்படம் இயக்குனர் சி எஸ்  அமுதன் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளை கேலி செய்யும் விதமாக டிவிட்டரில் பதிவு  ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.  தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்புகள் இந்திய அரசியலில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குனரான சி எஸ் அமுதன் இந்த  கருத்துக்கணிப்புகளை கலாய்த்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்த பின் இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம்தான் வெல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது’ எனக் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை அடுத்து இந்த கருத்தை அவர் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments