Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் ரிலீஸாகும்போதும் ரேஸில் பிஸி! போர்ச்சுக்கலில் அஜித்குமார் கார் ரேஸ்!

Prasanth Karthick
வியாழன், 6 பிப்ரவரி 2025 (08:29 IST)

அஜித்குமாரின் விடாமுயற்சி படம் இன்று ரிலீஸ் ஆகும் நிலையில், அஜித்குமாரோ போர்ச்சுக்கல் நாட்டில் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட முக்கிய நடிகராக அஜித்குமார் உள்ளார். அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிப்பது என்றால் மறுபக்கம் கார் ரேஸை தனது கனவாகக் கொண்டிருக்கிறார் அஜித்குமார். இன்று அவரது விடாமுயற்சி படம் ரிலீஸாகும் தருணத்திலும் கூட அவர் போர்ச்சுக்கலில் உள்ளார். அவரது அஜித்குமார் ரேஸிங் போர்ச்சுகலில் நடக்கும் வார இறுதி கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்கிறது.

 

போர்ச்சுக்கலில் உள்ள கார் ரேஸ் மைதானத்தில் அஜித் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் வெற்றிக்கும், விடாமுயற்சியுடன் ரேஸில் வெற்றி பெறுவதற்கும் ரசிகர்கள் அஜித்தை வாழ்த்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments