Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடநெருக்கடிக்கு நடுவில் வெளியாகும் புரூஸ்லீ

இடநெருக்கடிக்கு நடுவில் வெளியாகும் புரூஸ்லீ

இடநெருக்கடிக்கு நடுவில் வெளியாகும் புரூஸ்லீ
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:44 IST)
ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள புரூஸ்லீ படத்தை செப்டம்பரில் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.


 
 
கபாலிக்கு முன்னும் பின்னும் ஒருவாரம் எந்தப் படமும் வெளியாகவில்லை. அதன் பிறகு வெள்ளமென வெளியாகி வருகின்றன படங்கள். செப்டம்பர் அக்டோபரில் முக்கியமான படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியாக உள்ளது. இந்த நெருக்கடிக்கு நடுவில் ஜீ.வி.பிரகாஷ் நடித்த புரூஸ்லீ படத்தையும் தள்ளிவிட முடிவு செய்துள்ளனர். 
 
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துள்ளன. கீர்த்தி கர்பந்தா நாயகியாக நடித்துள்ளார். விரைவில் ட்ரெய்லர், பாடல்களை வெளியிட்டு செப்டம்பரில் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட... அஜித் இன்னும் மாறவேயில்லப்பா