Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும்… தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (18:15 IST)
நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஏ1 திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என பிராமணர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஏ1. சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோது, அந்த டிரெயிலரில் பிராமண சமூகத்தை பற்றி அவதூறாக காட்சியமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தற்போது ஏ1 திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அந்த கோரிக்கையில், சமூகங்களிடையே நல்லிணக்கம் பேணுகின்ற அனைத்து இயக்கங்களும் இந்த திரைப்படத்தை கண்டிக்க முன்வர வேண்டும் எனவும், மேலும் பிராமன சமூகம் மட்டுமல்லாது, இதர சமூக நண்பர்களும் இப்படத்தினை புறக்கணித்திட வேண்டும் எனவும் பிராமண சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments