Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறன் வழங்கும் படத்தை ரிலீஸ் செய்யும் முன்னணி விநியோகஸ்தர்!

vinoth
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (06:59 IST)
தமிழ்  சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக அறியப்படுபவர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமான இவர் அதில் நடித்த போஸ் என்ற கதாபாத்திரத்தின் காரணமாக போஸ் வெங்கட் என அறியப்பட்டார். அந்த சீரியல் அவருக்கு நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்த நிலையில் அதன் பிறகு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

தலைநகரம், சிவாஜி, கவன் ஆகியவை அவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் என்ற படத்தின் மூலம் போஸ் வெங்கட்  இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து அவர் இப்போது விமல் கதாநாயகனாக நடிக்கும் ம பொ சி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் புரொடக்‌ஷன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தலைப்பு ‘ம.பொ.சி’ என்பதற்கு பதிலாக ‘சார்’ என மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தனர். இந்நிலையில் இந்த படம் தற்போது ரிலீஸுக்கு நெருங்கி வரும் நிலையில் படத்தின் விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்த சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

’தேவரா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

‘வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும்’… ஜூனியர் என் டி ஆர் ஆசை!

‘அம்மாவுக்குக் கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்கள்’… தேவரா மேடையில் ஜான்வி நெகிழ்ச்சி

அடுத்த படம் பேன் இந்தியா லெவலில் ரீச்சாகும்… இயக்குனர் மோகன் ஜி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments