Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போஸ் வெங்கட்டின் ம பொ சி படத்தோடு கைகோர்த்த வெற்றிமாறன்!

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:08 IST)
தமிழ்  சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக அறியப்படுபவர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமான இவர் அதில் நடித்த போஸ் என்ற கதாபாத்திரத்தின் காரணமாக போஸ் வெங்கட் என அறியப்பட்டார். அந்த சீரியல் அவருக்கு நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்த நிலையில் அதன் பிறகு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

தலைநகரம், சிவாஜி, கவன் ஆகியவை அவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் என்ற படத்தின் மூலம் போஸ் வெங்கட்  இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து அவர் இப்போது விமல் கதாநாயகனாக நடிக்கும் ம பொ சி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை இப்போது வெற்றிமாறனின் கிராஸ்ரூட் புரொடக்‌ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் முதல் படமே பராசக்தி கதை தான்.. விக்ரம் நடிக்க இருந்தார்.. இயக்குனர் வசந்த பாலன்

முடிந்தது பராசக்தி டைட்டில் பிரச்சனை.. இரு தரப்பும் சமூக உடன்பாடு..!

விஜய் டிவி பெயரில் மோசடி.. யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அறிக்கை..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது… வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த ரெஜினா!

அடுத்த கட்டுரையில்
Show comments