Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர்கள் சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற"பூம்பூம் மாட்டுக்காரன்"

Short film contest
J.Durai
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (18:54 IST)
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த  Ifa இணைந்து நடத்திய 2023 ஆம் ஆண்டிற்கான இன்டர்நேஷனல் குறும்பட போட்டி  நடைபெற்றது. 
 
அதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் 12 குறும்படங்கள் இப் போட்டியில் கலந்து கொண்டன.
 
மறைந்த இயக்குனர் ராசு மதுரவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திம்மராயன் சுவாமி  இயக்கிய பூம்பூம் மாட்டுக்காரன் இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசான ரூபாய்  1 லட்சத்தை தட்டி
சென்றது.
 
அந்தப் பரிசுக்கான காசோலையையும் பாராற்று சான்றிதழையும் Ifa தயாரிப்பாளர்  சரவணன பிரசாத் மற்றும் ஆர் கே செல்வமணி ஆகியோர்கள் இணைந்து இயக்குனர் திம்மராயனிடம் வழங்கினர்
 
ஒளிப்பதிவு 
சபாகுமார் 
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருது பெற்ற எடிட்டர் சபாபு ஜோசப் 
ஆகியோர்கள் இந்த படத்தில் இடம்பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 நடிகர்கள்
 ராஜராகவன் 
 சுபாஷ் சந்திர போஸ் 
 ஸ்ரீதேவி
 மற்றும் B.M முருகேசன் ஆகியோரது நடிப்பில் உருவான இந்த குறும்படம் ஜூலை 31ஆம் தேதி இயக்குனர்கள் சங்கத்தில்
 ஆர்கே.செல்வமணி
 பேரரசு
 எழில்
 சரண்
 சரவண சுப்பையா
 மற்றும் உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது...
 
 ஒவ்வொருவருடைய வெற்றிக்கு பின்னால் எவ்வளவு பெரிய வலி இருக்கிறது என்பதை குறும்படம் சுட்டி காட்டுகிறது...
 
 வலி வெறும் வார்த்தை அல்ல உடல் நடுங்க  மனம் மனம் வழு விழுந்து  விழும் தருணமே வலி ஒரு திரைப்பட உதவி இயக்குனரின் வாழ்க்கையை வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.
 
 இந்தக் குறும்படம் இன்னும் பல விருது விழாக்களை அலங்கரிக்கப் போகிறது என்று பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இயக்குனர் திம்மராயன் விரைவில் வெள்ளித்திரையில் ஜொலிக்க அனைவரது வாழ்த்துக்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments