இரவு நேர ஊரடங்கு வந்தால் வலிமை ரிலீஸ் ஆகுமா? போனி கபூரின் திட்டம்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (15:37 IST)
போனி கபூர் என்ன ஆனாலும் வலிமை படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலிஸ் செய்தே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள மிகப்பெரிய படமாக வலிமை உள்ளது. இந்த படத்தை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கி உள்ளனர். இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தமிழக அரசு ஜனவரி 10 வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது. ஆனாலும் வலிமை சொன்ன தேதியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் மேலும் அதிகமாகி திரையரங்குகளுக்கு மேலும் கட்டுப்பாடுகளோ அல்லது முழுவதும் மூடப்படுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்படி ஏதேனும் நடக்கும் பட்சத்தில் வலிமை ரிலிஸ் ஆகாமல் போக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இப்போது வரை வலிமை ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் போனி கபூர் உறுதியாக இருக்கிறாராம்.

10 ஆம் தேதிக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வருகின்றன. அப்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டால் இரவு காட்சிகள் ரத்தாகும். ஆனால் இரவு நேர ஊரடங்கு வந்தாலும் வலிமை ரிலீஸ் ஆவது உறுதி என்ற முடிவிலேயே இப்போது வரை போனி கபூர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments