Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் படத்திற்கு பாகிஸ்தானில் தடை

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (20:11 IST)
சோனம் கபூர் நடிப்பில் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள நீர்ஜா படத்தை பாகிஸ்தானில் வெளியிட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் மத்வானி இயக்கத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள நீர்ஜா திரைப்படம், கடந்த 1986ஆம் ஆண்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து தீவிரவாதிகள் விமானத்தை கடத்தியபோது, அந்த விமானத்தில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற முயன்ற விமான பணிப்பெண் நீர்ஜா பனோட்டை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்துள்ளார். இப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. 
 
இதையடுத்து, பாகிஸ்தானில் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், நீர்ஜா படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
 
அந்த படத்தை வாங்கி வெளியிடுவதற்கு முதலில் தடையில்லா சான்று அளித்த அந்நாட்டு தகவல் மற்றும் வர்த்தகத்துறை பின்னர் அதனை விலக்கிக்கொண்டுவிட்டதாக தற்போது அறிவித்துள்ளது. இதனால், அந்நாட்டு கேபிள் மூலம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் அந்த படத்தை காண்பிக்கக்கூடாது என்று பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments