Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போகன் பர்ஸ்ட் லுக், ஹன்சிகா வெளியிட்டார்

போகன் பர்ஸ்ட் லுக், ஹன்சிகா வெளியிட்டார்

போகன் பர்ஸ்ட் லுக், ஹன்சிகா வெளியிட்டார்
, வெள்ளி, 10 ஜூன் 2016 (10:19 IST)
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் போகன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஹன்சிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


 
 
ஜெயம் ரவி, ஹன்சிகாவை வைத்து ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மணின் இரண்டாவது படம்தான் போகன். ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என்று ஜனரஞ்சமாக தயாராகும் இந்தப் படத்தை நடனப்புயல் பிரபுதேவா தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். தனி ஒருவனில் ஜெயம் ரவியுடன் மோதிய அரவிந்த்சாமி 
போகனின் இன்னொரு ஹீரோ. இவர், ஜெயம் ரவி இருவருக்குமே போகனில் போலீஸ் அதிகாரி வேடம். 
 
ஹன்சிகா மோத்வானி போகனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என்று கூறியிருந்தனர். அதன்படி தனது பேஸ்புக் பக்கத்தில் போகனின் பர்ஸ்ட் லுக்கை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜீ.வி.பிரகாஷ் குமார்