Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளடி பெக்கர் படத்தில் கவின் வந்தது எப்படி?.. இயக்குனர் சிவபாலன் பதில்!

vinoth
சனி, 19 அக்டோபர் 2024 (09:34 IST)
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இது ஒரு பிச்சைக்கார இளைஞனைப் பற்றிய படம் என்று தெரிகிறது.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் சிவபாலன் “நான் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். படம் பண்ண தயாரான போது அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். அவர் நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். இந்தக் கதையை எழுதும் போது கவின் இல்லை. ஆனால் எழுதி முடித்ததும் யாருமே பிச்சைக்காரனாக யோசிக்க முடியாத ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் அவரிடம் பேசினேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்தார். ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments