Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆரஞ்சு மிட்டாய் இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (10:43 IST)
சோதனை முயற்சி செய்பவர்களுக்கு கோடம்பாக்கத்தில் இடமளிக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி. அறுபது வயது கிழவராக அவரைத் தவிர வேறு யார் இங்கு நடிக்க தயாராக இருக்கிறார்கள்?
 
பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து வசனம் எழுதி நடித்த படம், ஆரஞ்சு மிட்டாய். இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. ரசிகர்களும் ஓரளவு வரவேற்பு அளித்துள்ளனர். படம் போட்ட காசை திருப்பும் என்ற உத்தரவாதம் கிடைத்ததே பெரிய விஷயம்தான்.
ஆரஞ்சு மிட்டாயின் வெற்றி காரணமாக மீண்டும் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. அவர் தற்போது ஒப்புக் கொண்டிருக்கும் அனைத்துப் படங்களுமே சிறந்த இயக்குனர்களின் படங்கள். அதில் மூன்று பேர் அவரை இரண்டாவதாக இருக்குகிறார்கள்.
 
பீட்சா கார்த்திக் சுப்பாராஜின் இறைவி, பண்ணையாரும் பத்மினியும் அருண்குமாரின் புதிய படம், பிஜு விஸ்வநாதன் இயக்கும் படம், காக்கா முட்டை மணிகண்டனின் படம் என நான்கு படங்களில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. 

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

Show comments