பிகில் 2: அட்லீ போட்ட ட்விட் - ரசிகர்கள் குஷி!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (12:33 IST)
நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் அட்லீ தெறி , மெர்சல் , பிகில் என இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் சமீபத்தில் வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்பட்டது. 
இதையடுத்து தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. 
 
ஆம், அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் . அந்த புகைப்படத்தில் விஜய், அட்லீ இருவரும் பிகில் 5 @அட்லீ என்று ஜெர்ஸி அணிந்திருக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 5 வது படமும் விஜயுடன் தானா? பிகில் 2 பார்ட்டா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments