Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னங்கடா, இதை கூட காப்பி அடிக்கிறீங்க: பிக்பாஸ் ரசிகர்கள் புலம்பல்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (13:14 IST)
என்னங்கடா, இதை கூட காப்பி அடிக்கிறீங்க: பிக்பாஸ் ரசிகர்கள் புலம்பல்!
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் போட்டியாளர்களில் சிலர் அரக்கர்களாகவும், சிலர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி உள்ளனர் என்பதும் இந்த டாஸ்க்கின்படி அரக்கர்கள், ராஜ வம்சத்தினர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்றும் ராஜ வம்சத்தினர் சிலை போல அசையாமல் இருந்து பொறுமை காக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த டாஸ்க்கில் சுரேஷ், அனிதா, வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, ஆரி, உள்ளிட்டோர் அரக்கர்களாகவும், ரம்யா, சனம்ஷெட்டி, சோமசேகர், பாலாஜி, உள்ளிட்டோர் ராஜ வம்சத்தினர்களாகவும் உள்ளனர். இந்த டாஸ்க்கில் பாலாஜி மற்றும் சுரேஷ் இடையே பிரச்சினை வந்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் அப்படியே அச்சு அசலாக அதிலும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் தமிழில் இருக்கும் காட்சிகள் போன்றே அதிலும் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது 
 
இதனை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் ’என்னங்கடா இதைக்கூட காப்பி அடிக்கிறீங்க’ என்று புலம்பி வருகின்றனர். பிக்பாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டுக்கும் ஒரே இயக்குனர்களா? அல்லது ஒரே ஸ்க்ரிப்ட் ரைட்டர்களா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments