Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாளிலேயே காதலில் விழுந்த அபிராமி! காதலன் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (07:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதலர்கள் உருவாகுவது வழக்கமே. ஆனால் இந்த காதல் ஒருசில வாரங்கள் கழித்தே இதற்கு முன்னர் நடந்த இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளது. 
 
முதல் பாகத்தில் ஓவியா-ஆரவ், இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா காதல் கிட்டத்தட்ட ஐம்பது நாட்களை கடந்த பின்னரே தோன்றியது. ஆனால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய முதல் நாளிலேயே 'நேர் கொண்ட பார்வை' அபிராமிக்கு காதல் வந்துவிட்டது. அவர் ரேஷ்மாவிடம் தான் கவின் மீது காதல் கொண்டிருப்பதாகவும், கவின் இந்த காதலை ஏற்று கொள்வாரா? என தெரியவில்லை என்றும் போகப்போக பார்ப்போம் என்றும் கூறுகின்றார். இது காதலாகுமா? அல்லது நட்புடன் நின்று கொள்ளுமா? என்பதை போகப்போக நாமும் பார்ப்போம்
 
நேற்றைய புரமோவில் சேரனும் ஃபாத்திமா பாபுவும் மோதும் வகையிலான ஒரு புரமோ பார்த்தோம். அதேபோல் சாண்டிக்கு அடிபட்டது போன்ற ஒரு வீடியோ புரமோவும் வெளிவந்தது. இரண்டுமே கிட்டத்தட்ட உண்மை என்பது நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து தெரிய வந்தது. தண்ணீர் பிரச்சனை குறித்து சேரன் கூறிய கருத்தை பாத்திமா பாபு ஏற்றுக்கொண்டாலும் அவரது முகம் சுருங்கியதை பார்க்க முடிந்தது
 
அதேபோல் தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் நடனம் ஆடிய சாண்டிக்கு தாடையில் காயம் ஏற்பட்டு தையல் போடும் நிலைமை வந்துள்ளது. இவர் போடும் ஆட்டத்திற்கு இந்த காயம் பத்தாது என்றே தோன்றுகிறது. ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது என்பதை இவருக்கு யாராவது புரிய வைக்க வேண்டும்.
 
மொத்தத்தில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாகவும் இறுதியில் காதலுடனும் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் ‘ஓடிடி’ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது!

செல்வராகவன் & ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடக்கம்!

80 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சில்லரையாக வழங்கிய நபர்.. நீதிமன்றம் அதிர்ச்சி..!

பிக்பாஸ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?

தனுஷின் இட்லி கடை பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments