Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் எல்லாம் ஸ்கிரிப்ட்படிதான் நடக்கிறது; உண்மையை உடைத்த ஆரவ் சகோதரர்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (12:45 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 15 போட்டியாளர்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதல் அவரது கலகலப்பான பேச்சு, செயல்கள் எல்லாம் பிக் பாஸ் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

 
 
'பிக் பாஸ்' வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் ஓவியாவை ஒதுக்கியபோது ஓவியாவுக்கு ஆதரவாக நின்றவர் ஆரவ் மட்டுமே. இதனாலேயே ஓவியாவுக்கு ஆரவ்வை மிகவும் பிடித்துவிட்டது.
 
இந்நிலையில் பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியது தனக்கு வருத்தமளிப்பதாக ஆரவ்வின் அண்ணன் நதீம்  கூறியுள்ளார். மேலும் ஆரவ், ஓவியாவுக்கு 'மருத்துவ முத்தம்' பற்றி கூறும்போது, ஆரவ் மிகவும் கண்ணியமானவன். அவன்  காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய மாட்டான். நிகழ்ச்சியில் நடப்பது எல்லாவற்றையும் ஸ்க்ரிப்டாகத்தான் எங்கள்  குடும்பத்தார்கள் பார்க்கிறோம். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்று விபரம் அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள். நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே நெட்டிசன்களும் இதையே தான் தெரிவித்து வருகிறார்கள். இதை எல்லாம் கண்டுகொள்ளமல் உள்ளார் பிக் பாஸ்.
 
பிக் பாஸ் சமூக வலைதளங்களில் நடப்பவற்றை உற்று கவனித்து வருகிறார். அதற்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டை மாற்றிக் கொடுத்து  போட்டியாளர்களை நடிக்க வைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments