Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி, ஜூலி - ப்ரொமோ

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (12:02 IST)
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஓவியா, ஜூலி மற்றும் காயத்ரி சென்ற பிறகு நிகழ்ச்சியின் விறுவிறுப்பு குறைந்து விட்டது. இதனால் இதனை சரிசெய்ய என்னென்னவோ முயற்சி செய்து, புதுமுகங்களை அழைத்து வருகிறார் பிக்பாஸ். இதனால் எந்த பயனும் இல்லை. ரசிகர்கள் விரும்புவது ஓவியாதான். ஆனால் அவர் வர தயாராக இல்லை.

 
இந்த நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்டதற்கு, அதற்கு காயத்ரி முடியாது என்று மறுத்து விட்டார். பரணி  இப்போது செல்லும் நிலையில் இல்லை என்று கூறி விட்டார். ஆர்த்தியும், ஜூலியும் செல்ல தயார் என்று கூறினார். சக்தியும்  இரண்டு பேரை டிரிக்கர் செய்ய வேண்டும். அதற்காக வேண்டுமானால் செல்கிறேன் என்றார்.

 
எனவே இந்த 3 பேரில் இரண்டு பேர் மட்டுமே செல்ல வாய்ப்பு உள்ளது. நேற்றைய ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டில் ஆர்த்தியின் குரல் ஒலித்தது. எனவே அவர் செல்வது உறுதியாகி விட்டது. இன்னொருவர் ஜூலியா அல்லது சக்தியா என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டில் ஜூலியும், ஆர்த்தியும் செல்கின்றனர்.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments